"கொடநாடு கொலை வழக்கு" - "டிடிவி சொல்வதுதான் வேடிக்கை".. பரபரப்பாக பேசிய ஜெ.தீபா
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது தேசிய கொடியை அவர் தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூவர்ண கொடியின் ஆரஞ்சு பகுதிக்கு பதிலாக பச்சை நிற பகுதி முதன்மையாக ஏற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூட, தம்பி தீபக் அனுமதிப்பதில்லை என தீபா குற்றம்சாட்டினார். கொடநாடு எஸ்டேட் சசிகலா , டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் போது தான் கொலை, கொள்ளை நடைபெற்றதாக கூறினார்.
தற்போது டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்த்து கொடநாடு விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என கூறியிருப்பது வேடிக்கையானது என்றும் தீபா கூறினார்.