பகிரங்கமாக வெடித்த நடிகை கஸ்தூரி பேச்சு.. கண் சிவந்து பாஜக | Kasthuri | BJP | Thanthitv

Update: 2024-11-04 14:48 GMT

சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, 300 ஆண்டுகளுக்கு முன் மன்னர்களின் அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள், தமிழர்கள் என்று கூறிக்கொள்வதாக தெரிவித்தார். நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியும், நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், நடிகை கஸ்தூரி, தனது பேச்சை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கஸ்தூரியின் பேச்சு தமிழக மக்கள் மற்றும் தெலுங்கு பேசும் மக்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்