"உண்மையில்லை".. அடித்து சொன்ன கனிமொழி MP

Update: 2024-02-10 15:38 GMT

கோவை பீளமேடு பகுதியில், திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, குமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளையும் பெற்று வருவதாக கூறினார். தேர்தல் அறிக்கையில் திமுக முன்வைத்த‌ அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறிய அவர், கொவை புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மின் கட்டணம் உயர்வு தொடர்பாக பலமுறை தொழில்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கனிமொழி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்