ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது. நிலமோசடி புகாரில் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு கடந்த மாதம் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், உயர்நீதிமன்றம் வழக்கில் அனைத்து அம்சங்களையும் ஆராயவில்லை, அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.