கட்சிக்காக எவ்வளவு உழைத்தாலும், முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் என்பதையே திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செய்தி கூறியுள்ளதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சியினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அவர், தமிழக அமைச்சரவை மாற்றத்தை கடுமையாக விமர்சித்தார்.