``583 நாளாச்சு''.. ஜெயக்குமார் வழக்கில்... மகேசுக்கு ரூ.5லட்சம் அபராதம் - ஹைகோர்ட் அதிரடி..!
சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம்
மிரட்டி அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல்
விடுத்ததாகவும் மகேஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள்
ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது
கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ்
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர்
வழக்குப்பதிவு செய்தனர். தன்னை பற்றி அவதூறான
கருத்துக்களை வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய்
மான நஷ்ட ஈடு கோரி மகேசுக்கு எதிராக ஜெயக்குமார்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு
விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான
வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியம், மகேஷ் 583 நாட்களுக்கும் மேலாக எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார். இதையடுத்து அபராதமாக 5 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த மகேசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.