``பாஜக கூட்டணியை முறித்தாலும்..'' - விரக்தியை வெளிப்படுத்திய நிர்வாகிகள்.. ஈபிஎஸ் கொடுத்த ஷாக் பதில்

Update: 2024-07-16 04:43 GMT

"சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற நாம் இன்னும் உழைக்கவேண்டும்", என அதிமுக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மயிலாடுதுறை தொகுதி நிர்வாகிகள், "பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகினாலும், சிறுபான்மையினரின் வாக்கை ஈர்க்க முடியவில்லை" என தெரிவித்தனர். அப்போது பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "வரும் நாட்களிலும், பாஜக உடன் கூட்டணி கிடையாது... இரண்டாயிரத்து 26 சட்டமன்ற தேர்தலில், வலுவான கூட்டணியை அதிமுக அமைக்கும்" என தெரிவித்தார். மேலும், "சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெற நாம் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தினார். இதேபோன்று, இன்று, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் நிர்வாகிகளுடன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்