காவல்துறை மேற்கொள்ளும் என்கவுண்டர்கள் கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் கொலையில், கைதானவர்கள் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்கப்பட்டிருக்கிறார்கள் என செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை நீதித்துறையை கையில் எடுப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது, என்கவுண்டர் செய்வது போன்ற சூழல் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.