ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமோரி மற்றும் இவாதே மாகாணங்களுக்கு இடையே, அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 80 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதான, ஜப்பானின் நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்றாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.