பருவ மழை காலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும், நீர்நிலைகளை தொடர்ந்து
கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பல்வேறு நீர் ஆதார கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைக்கும் பணிகள் மற்றும் பருவ மழைக்கு முன் காவேரி டெல்டா படுகையில் சிறப்பு தூர்வாரும் பணிகள் போன்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க அறிவுறுத்தினார். மிக்ஜாம் புயலால் வட மாவட்டங்களும், வரலாறு காணாத அதீத கன மழையால் தென் மாவட்டங்களும் கடந்த முறை பாதிக்கப்பட்ட நிலையில், நீர்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்கும் விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தினார்.