அடுத்தடுத்து கிழிக்கப்பட்ட சீட்.. தமிழகம் முழுவதும் திமுக கவுன்சிலர்களுக்கு பறந்த வார்னிங்

Update: 2024-09-04 08:53 GMT

ஆலந்தூர் தி.மு.க. உறுப்பினர் கூட்டத்தில் பேசிய கட்சி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னையில் சரியாக பணியாற்றாத 5 கவுன்சிலர்களை நீக்கப்போவதாக குறிப்பிட்டார். தி.மு.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றார். தெலங்கானா, ஆந்திரா வெள்ளத்தை சுட்டிக் காட்டியவர், மழைநீர் வடிகால் தேவை பற்றி அமைச்சர்களிடம் தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எவ்வளவு பணி செய்தாலும் வீட்டுக்குள் நீர் வந்தால் மக்கள் குறை கூறுவார்கள் என்றவர், தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பொறுப்புணர்வு செயல்பட கவுன்சிலர்களை கேட்டுக் கொண்டார்

Tags:    

மேலும் செய்திகள்