டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்தார். குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ஒட்டி, டெல்லி ராஜேந்திர பிரசாத் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு சென்ற திரவுபதி முர்முவுக்கு, மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய திரவுபதி முர்மு, அவர்களுக்கு பாடமும் எடுத்தார்.