"கடந்த 40 நாட்களில் கோவையில்..." போலீஸ் சூப்பிரண்டு சொன்ன தகவல்

Update: 2024-06-17 05:56 GMT

கடந்த 40 நாட்களில் கோவையில்..." போலீஸ் சூப்பிரண்டு சொன்ன தகவல்

கோவை மாவட்டத்தில், கடந்த 40 நாட்களில் 175 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சியில், 60 கிலோ கஞ்சாவை வாகன சோதனையில் பறிமுதல் செய்ததாக தெரிவித்தார். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 742 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக அவர் கூறினார். மேலும், மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பத்ரி நாராயணன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்