இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கழகக் கொள்கைகளையும், வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.