சென்னை பள்ளி மாணவர் பற்றி பரவிய தகவல்.. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பதிவு
சென்னை பழவந்தாங்கல் அரசுப்பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்ததாக வெளியான செய்தி வருத்தமளிப்பதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அவ்வப்போது கஞ்சா தொடர்பாக திடீர் சோதனை நடத்தப்படுவதாக காவல்துறை கூறுவதாகவும், ஆனால் பள்ளிக்கு அருகிலேயே மாணவர்களுக்கு கஞ்சா கிடைப்பது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்கள் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.