"என்ன அது சங்கீதாவா...!" துண்டு சீட்டை எடுத்து படித்த துரைமுருகன்.. மேடையில் குபீர் சிரிப்பு
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, தி.மு.க சட்டத்துறை சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். பா.ஜ.க அரசு, 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக இந்த பெயரை நீதிமன்றங்களில் உச்சரிக்க வேண்டும்... இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.