``மன்னிக்கவே முடியாது...'' வாழத் தகுதியற்ற மாநகரமா சென்னை..?'' - அன்புமணி ஆவேசம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தொழில் வரி 35 சதவீதமும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவர்கள் மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகளை சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயலாகும் என அவர் விமர்சித்துள்ளார்.