பாஜக வெற்றிக்கு சரக்கோடு கறிவிருந்து - போலீஸ் பாதுகாப்போடு ஊற்றி ஊற்றி கொடுத்த பாஜக பெரும் புள்ளி
பாஜக வெற்றிக்கு சரக்கோடு கறிவிருந்து
போலீஸ் பாதுகாப்போடு தடபுடல் பார்ட்டி
ஊற்றி ஊற்றி கொடுத்த பாஜக பெரும் புள்ளி
கர்நாடகாவில் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் பாஜக வெற்றிப்பெற்றதற்கு கொடுக்கப்பட்ட சரக்கு பார்ட்டி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
வானிலை இதமாக காட்சியளிக்க, வரிசையில் முண்டியடிக்கும் இவர்கள்.... ஏதோ கபசுர குடிநீர் வாங்க வந்தவர்கள் இல்லை... கிக்குக்காக சரக்கு வாங்க நிற்பவர்கள்... அதுவும் ஓசி சரக்கு...
ஆமாங்க... சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுதாகர் வெற்றிப் பெற்றதற்கு நன்றி தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட தடல்புடல் விருந்துதாங்க...
விருந்துக்கு சென்றவர்களுக்கு கேஸ்... கேஸ்... ஆக சரக்கு பாட்டில்கள் காத்திருந்தன....
மறுபுறம் லாங் கியூவில் முண்டியடித்துக்கொண்டு காத்திருந்தார்கள்... நன்றி வாங்க வந்தவர்கள்....
அங்கிருந்த காட்சிகள்.... அப்படியே சினிமாவில் சந்தானம் கொடுத்த வாக்குறுதியை காட்டியது...
சின்ன பிரீத்... கலகலப்பு .... எனக்கு மட்டும் ஓட்டுபோட்டால் சாராயம் ஓடும்.. என சொல்லும் காட்சி
ஒரு கட்டத்தில் குடிமகன்கள் கொஞ்சம் உணர்ச்சிபொங்க... கூட்டத்தில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுவிட்டது. விருந்து என்று சொல்லிவிட்டு சரக்குதானா...? என ஆதங்கப்படாத வகையில்... காரசாரமாக மட்டன்.... சிக்கன் எல்லாம் எண்ணெயிலும்... குழம்பிலும் கொதித்தது...
அதை சரக்கடித்த சூட்டோடு.... அள்ளி ஒரு கட்டு கட்டி விழாவை சிறப்பித்தனர் மக்கள்... மறுபுறம் விழாவை சிறப்பித்து தந்தவர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்திருக்கிறார் விழாவை ஏற்பாடு செய்த நெலமங்களாவை சேர்ந்த பாஜக பிரமுகர்...
சரக்கு பார்ட்டி இனிதே நிறைவடைந்தது... கர்நாடகா போலீஸ் பந்தோபஸ்தோடு... இப்போது இந்த போலீஸ் பந்தோபஸ்து ஏற்பாடுதான் சரக்கு பார்ட்டி கர்நாடக அரசியலை கலக்க காரணமாகியிருக்கிறது...
விழாவில் மதுபானங்கள் வழங்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதாகரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது... நன்றி தெரிவிக்கதான் ஏற்பாடு செய்யப்பட்டது... ஆதரவாளர்கள் யாராவது மது வாங்கி வந்து கொடுத்திருக்கலாம் எனக் கூறினார்...
மறுபுறம்... இந்த சரக்கு பார்ட்டிக்கு மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதி வழங்கியது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால்... நன்றி தெரிவிக்கும் விழா என சொல்லிவிட்டு... சரக்கு பாட்டிலை நீட்டிவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அனுமதி பெறும்போது உணவிற்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
சரக்கு பார்ட்டி காட்சியை பார்க்கும் பலரும்... தேர்தலின் போது கொடுத்தா தானாங்க பிடிப்பிங்க.. இப்போது எப்படி...? என புதுடெக்னிக்கை கேள்வி எழுப்புகிறார்கள்.
குக்கருக்கு 20 ரூபாய் டோக்கன் ஒரு காலத்தில் தமிழக அரசியலை கலக்கியதுபோல்... கர்நாடகாவை கலக்கி வருகிறது சரக்கு பார்ட்டி...