பாஜக கேபினட் அமைச்சர் திடீர் ராஜினாமா..! ராஜஸ்தான் அரசியலில் அடுத்த பரபரப்பு
ராஜஸ்தான் மாநில விவசாயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் கட்சி வெற்றிக்கு பொறுப்பு ஏற்றவர். 7 தொகுக்குமான பொறுப்பை பிரதமர் மோடியே வழங்கியதாக பிரசாரங்களில் நெகிழந்தார். ஆனால், அவர் பிரசாரம் செய்த 7 தொகுதிகளில் பாஜக 5 தொகுதிகளில் தோல்வியை தழுவியது. அவருடைய சொந்த மாவட்டமான தௌசா தொகுதியிலும் பாஜக தோல்வியை தழுவியது. இதன் தொடர்ச்சியாக கிரோடி லாம் மீனா, தன்னுடைய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் ராஜினாமா கடிதத்தை பஜன்லால் சர்மா ஏற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன