ஈபிஎஸ் அறிவித்தபடியே இன்று.. பரபரக்கும் அரசியல் களம்

Update: 2024-03-04 04:29 GMT

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

டெல்லியில், போதைப் பொருள் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தலைவராக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக ஆர்பாட்டம் நடத்தும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாணவர் அணி, மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்