கொதிக்கவிட்ட அவரின் வார்த்தைகள்.. குமுறிய அண்ணாமலை

Update: 2024-07-04 02:24 GMT

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், இன்று நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என்று ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்தி ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பதாக அண்ணமலை எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கு கடும் கண்டனத்துக்குரியது என்றும் தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள் என்றும் அண்ணாமலை அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்