மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு எப்போது நடைமுறைக்கு கொண்டு வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.