உதகை தி.மு.க நகர்மன்ற துணைத்தலைவர் 36 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தவறான ட்வீட் செய்த பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தி.மு.க. கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். உதகையில் மார்க்கெட் கடைகள் பார்க்கிங்கோடு கட்டப்படுவதற்கு முதற்கட்டமாக 36 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியதாக நகரமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கமிஷன் பெற்றதாக துணை தலைவரும், நகர மன்ற உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கருத்து பதிவிட்ட அண்ணாமலை, 36 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து உதகை 18-வது வார்டு தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் முஸ்தபா, உதகை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.