தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழக மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். பாமகவை
சாதி கட்சி என்று சொல்வது தவறு என்றும் அனைத்து சமுதாயத்தினருக்குமான உரிமைகளை பாமக மீட்டு கொடுத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.
பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு பைசா செலவிடாமல்
தரமான கல்வி வழங்கப்படும் என்று அன்புமணி
ராமதாஸ் கூறினார்.