மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸை கண்டுபிக்க ராகுல் காந்தி ஒரு யாத்திரை நடத்த வேண்டியிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். கோவாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி சிறிய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை; அதனால்தான் காங்கிரஸ் ஜோடோ யாத்திரை கோவாவுக்கு வரவில்லை என்றார். ஜூன் 4-ஆம் தேதிக்கு காங்கிரஸ் கட்சியை எங்கும் காண முடியாது என்பதால், காங்கிரஸ் கட்சியை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் ஒரு யாத்திரை நடத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். காங்கிரஸின் தோல்விக்கு ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும், கார்கே பலியாகப் போகிறார் என்றும் அவர் கூறினார்.