"இந்துத்துவா + ஜெயலலிதா.. அதிமுகவை மத ரீதியாக பிரிக்க பாக்கும் பாஜக" - கொ.ம.தே.க ஈஸ்வரன்
தமிழகத்தில் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமைப்பட்டு செயல்படவில்லை என்றால், அதிமுகவை பின்னுக்கு தள்ளி, பாஜக பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கும் என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று சொல்லி, அதிமுகவை மத ரீதியாக பிரித்து, அக்கட்சியில் இருக்கிறவர்களை, பாஜக பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தொண்டர்களிடம் இது எடுபடுமா என தெரியாது என்றும், ஆனால் பாஜகவின் நோக்கம், அதிமுகவை அழித்து தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தங்களை நிலை நிறுத்திக் கொள்வது தான் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.