“தமிழக அரசு மீது புகார்“ - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

"காவிரி" விவகாரத்தை தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என, கர்நாடகா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-03-10 02:16 GMT
"காவிரி" விவகாரத்தை தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என, கர்நாடகா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். "மேகதாது அணை விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே திட்டத்திற்கு அனுமதி" என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கர்நாடகா மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. "காவிரி" விவகாரத்தை தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என்றும் கடிதத்தில் அவர் கூறியுள்ளார். "மேகதாது" விவகாரம் தமிழகத்தில் பாஜக கையிலே எடுத்துள்ள அரசியல் கருவியாக உள்ளது என சித்தராமையாக விமர்சித்துள்ளார். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து அனுமதிகளையும் விரைவில் வழங்கி, கூடுதல்நிதி ஒதுக்கிட வேண்டும் என்றும், சித்த ராமையா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்