இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-10-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-03 17:55 GMT

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்...

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...


தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி...

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முன்னதாகவே முடிக்கப்படும் என்றும் நம்பிக்கை...


மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணத்தைக் கூறி, 32 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கவில்லை...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...


கோடீஸ்வரர்களின் கடனை மட்டுமே தள்ளுபடி செய்கிறார் பிரதமர் மோடி...

அரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...


கோவை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு ரத்து...

எதிர்த்து குரல் எழுப்பினால் சஸ்பெண்ட் செய்வீர்களா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

Tags:    

மேலும் செய்திகள்