ரூ.3.5 கோடி கருப்பு பணம் விவகாரம் - பாஜக பிரமுகர்களிடம் தொடர்ந்து விசாரணை
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு பாஜக ஏற்பாட்டின் பேரில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் மூன்றரை கோடி ரூபாய் கருப்பு பணம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரூ.3.5 கோடி கருப்பு பணம் விவகாரம் - பாஜக பிரமுகர்களிடம் தொடர்ந்து விசாரணை
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு பாஜக ஏற்பாட்டின் பேரில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் மூன்றரை கோடி ரூபாய் கருப்பு பணம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஏப்ரல் 20 ஆம் தேதி நள்ளிரவு சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு கார் மோதியது. இதையடுத்து, பின்னால் வந்த காரில் வந்தவர்கள் தங்களிடம் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறி, கொடக்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் காரில் இருந்தது 3 கோடியே 50 லட்சம் ரூபாய் கருப்பு பணம் எனவும், அது தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்ட பணம் எனவும் தெரியவந்தது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு பாஜக அனுப்பிய இந்த பணத்தை நன்கு அறிந்தவர்கள் சிலரே கொள்ளையடித்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது,.இதையடுத்து கூடுதல் விசாரணைக்காக, திருச்சூரை சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆகியோரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கணேஷ் மாநில அலுவலக செயலாளர் கிரீஷ், மற்றும் ஆலப்புழா மாவட்ட பொருளாளர் கர்த்தா ஆகியோரை விசாரணைக்காக இரு தினங்களுக்குள் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,. ஏற்கனவே பாஜக பிரமுகர்கள் ஹரி, அஜய் சேனன்,காசிநாதன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,.