"அ.தி.மு.க.வின் கட்சி பணிக்காக தலைமை செயலகம்" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு

அ.தி.மு.க.வின் கட்சி பணிக்காக தலைமை செயலகத்தை பயன்படுத்தியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-16 18:49 GMT
அ.தி.மு.க.வின் கட்சி பணிக்காக தலைமை செயலகத்தை பயன்படுத்தியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் தெரிவித்துள்ளார். குடியுரிமை மசோதாவை ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. எஸ்.ஆர் . பாலசுப்பிரமணியத்துக்கு,  தலைமை செயலகத்திலிருந்து  அரசு துணை செயலாளர் ஒருவர் பேசியதாக துரை முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ள துரைமுருகன் , இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்