இன்று வெங்கைய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற உள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
இதற்காக நேற்றிரவு சென்னை விமானநிலையம் வந்தடைந்த அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து, கிண்டி ஆளுனர் மாளிகைக்கு புறப்பட்டு சென்ற அமித்ஷாவை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்த நிலையில், மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" எனும் தலைப்பில் வெங்கைய்யா நாயுடுபுத்தகம் எழுதியுள்ளார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிடுகிறார். இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.