திரிணாமூல் காங்.கட்சியில் இருந்து விலகிய 2 எம்.எல்.ஏக்கள் : பாஜகவில் இணைந்த திரிணாமூல் காங். கவுன்சிலர்கள்...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, 2 எம்எல்ஏக்கள், மற்றும் 50 கவுன்சிலர்கள், பாஜகவில் இணைந்துள்ளனர்.
மக்களவை தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், ஒவ்வொருவராக பாஜகவில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில், பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியாவை நேரில் சந்தித்த, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ, மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, கைலாஷ் விஜய் வர்கியா 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது போல், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து 7 கட்டங்களாக பல்வேறு கட்சியனரும் தங்களை இணைத்து கொள்வார்கள் என கூறினார்.