நல்ல சம்பளம், அழகான மாப்பிள்ளை தேடிய பெண்களுக்கு அதிர்ச்சி.. வாழ்க்கை துணை தேடி கதறிய பெண் - உஷார்

Update: 2024-11-16 05:46 GMT

கர்நாடக மாநிலம் மாண்டியா தாலுகாவில் உள்ள மச்சஹள்ளியைச் சேர்ந்தவர் மது. 31 வயது இளைஞரான இவர், தாவணகெரே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் மேட்ரிமோனியல் தளம் மூலமாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். செல்போன் வழியாக அப்பெண்ணுடன் நெருக்கமான அவர், அப்பெண்ணுக்கு ரயில்வே பணி மனையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, வங்கி கணக்கு மூலமாக 21 ஆயிரம் ரூபாய் பணம் வசூலித்துள்ளார். ஒரு கட்டத்தில் இளம் பெண்ணுக்கு சந்தேகம் எழுந்து கேள்வி கேட்க தொடங்கினார். இதனையடுத்து உஷாரான மது, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைவமறைவானார். பாதிக்கப்பட்ட பெண் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் இறங்கினர். ஹரிஹர், காட்டன்பேட்டை, கே.கே.நகர் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த பெண்களிடம் மொத்தமாக 62 லட்சம் ரூபாய் பணத்தை மது மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. தற்போது இளைஞர் மது போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்