மக்களவை தேர்தல் - சில சுவாரஸ்ய தகவல்கள்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக 303 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு கட்சி 300 இடங்களுக்கு மேல் தனித்து பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக 303 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு கட்சி 300 இடங்களுக்கு மேல் தனித்து பெறுவது இது இரண்டாவது முறையாகும். 1984 ல் இந்திராகாந்தி கொலைக்கு பின் நடந்த தேர்தலில், 414 இடங்களை காங்கிரஸ் தனித்து பெற்றதே, இந்திய வரலாற்றில் ஒரு கட்சி அதிகம் பெற்ற வெற்றி. இந்தியாவின் 29 மாநிலங்களில் 18 மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஒரு எம்.பி கூட இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கேரளாவை தவிர வேறு எங்கும் இரட்டை இலக்கு எம்.பிக்கள் இல்லை.கேரளாவில் தான் அதிகபட்சமாக 15 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா தொகுதிக்கு அடுத்து , இன்னொரு மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யை பார்க்க வேண்டும் என்றால் மத்திய பிரதேசம் சிந்த்வாரா தொகுதிக்கு தான் செல்ல வேண்டும் அதுவும் ஆயிரத்து 242 கி.மீ பயணித்தால் தான். இந்த தேர்தலில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர் பாட்டீல் என்ற பா.ஜ.க. பிரமுகர் 6,89,668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறைந்த பட்சமாக உத்திர பிரதேச மாநிலம் மச்லீசார் தொகுதியில் போட்டியிட்ட போலநாத் என்ற பாஜக வேட்பாளர் 181 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குஜராத், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான்,இமாச்சல் பிரதேசம், திரிபுரா, உத்ரகாண்ட்,அருணாசலம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் பா.ஜ.க. வசம் உள்ளன. சண்டிகர், டாமன் டையூ உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களையும் பா.ஜ.க.வே கைப்பற்றியுள்ளது.