சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்தது, திமுக

3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது.

Update: 2019-04-30 19:03 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர், பேரவை செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்தனர். அப்போது, தினகரன் ஆதரவாளர்களாக செயல்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய  சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவை அளித்தனர். அதில், 22 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு மே 23ம் தேதி வரவுள்ள நிலையில், இதுபோன்ற முடிவை சபாநாயகர் எடுப்பது, தமிழக சட்டப்பேரவை மாண்புக்கு கேடாக அமையும் என்றும், இது, மக்களாட்சியில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதை உணர்த்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்