"உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு பாஜக" - பிரதமர் மோடி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பாக பாஜக திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பாக பாஜக திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஒடிஷாவின் சுந்தர்கார்கில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி முன்பொரு காலத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் தற்போது பாஜக கொடி பறப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு சிறந்த பலமான மாற்று கட்சியாக பாஜக திகழ்வதாகவும், மீண்டும் மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்தார்.