காற்றாலை மின்சாரம் கொள்முதல்: "தங்கமணிக்கு எதிராக புதிய ஆவணத்தை ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்"

காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில், முறைகேடு நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய ஆவணம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Update: 2018-09-20 20:07 GMT
உற்பத்தியே ஆகாத காற்றாலை பெயரில், 9  கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு காற்றாலை மின்சாரம் வாங்கியதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டு உள்ளதாக  அதில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்சினை இல்லை என்றால், 9 கோடி ரூபாயை வசூல் செய்யுமாறு, ஆடிட் அதிகாரி கூறி இருப்பது ஏன் என்றும் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 

ஊழல் நிகழவில்லை என அமைச்சர் தங்கமணி இப்போதும் கூறுவாரேயானால், பதவியை ராஜினாமா செய்து விட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என்று மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்