அண்ணாந்து பார்க்கும் போது பாய்ந்த குண்டு..தலைகீழான பஞ்சாயத்து தலைவி நிலைமை..

Update: 2024-01-27 08:22 GMT

கர்நாடகம் மாநிலம் விஜயப்புரா மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பஞ்சாயத்து தலைவி சோமவ்வா என்பவர் தேசியக்கொடியை ஏற்றியபோது, அங்கிருந்த ஒருவர் திடீரென்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக சோமவ்வாவின் காலில் குண்டு பாய்ந்ததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் கன்னட அமைப்பு பிரமுகர் மல்லு கின்னி என்பவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்த நிலையில், தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்