வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைதள பதிவில், வயநாட்டில் இயற்கை பேரிடரால் இதயம் நொறுங்கி விட்டதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசு நிர்வாகங்களுக்கும், மீட்பு குழுவினருக்கும், களத்தில் உதவும் மக்களுக்கும் மரியாதை செலுத்துவதாகவும் நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.