இந்தியா இதுவரை பார்த்திடாத ஒரு கோரம்.. இந்திய வானிலை மையம் செய்ய தவறியது அம்பலமா?

Update: 2024-08-01 10:42 GMT

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்ததா? என்பது குறித்து இப்போது காணலாம்...


கேரளாவில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில், கேரளாவுக்கு எந்தவிதமான வானிலை முன்னெச்சரிக்கையும் விடப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

23-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரை, கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதற்கான மஞ்சள் எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

28-ம் தேதி கேரளாவில் எந்த மழைப்பொழிவிற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

29-ம் தேதி கேரளாவில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும்,

29-ம் தேதியன்று கொடுக்கப்பட்ட அறிக்கையில் 30, 31, 1 ஆகிய தேதிகளில், கேரளாவில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ரெட் அலர்ட் கூட வழங்கப்படவில்லை என்றும், சம்பவத்தன்று காலை அதாவது ஜூலை 30-ம் தேதி தான் ரெட் அலர்ட் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்