தேர்தல் அதிகாரி மீது கை வைத்த சுயேச்சை.. கலவரத்தில் ஒரு ஊரே தீ வைத்து எரிப்பு.. ஷாக் வீடியோ

Update: 2024-11-14 03:47 GMT

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் அதிகாரியை சுயேச்சை வேட்பாளர் தாக்கியது, அதைத் தொடர்ந்து நள்ளிரவில் வன்முறை வெடித்து கிராம‌ம் தீ வைத்து எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டியோலி உனியரா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசில் சீட் வழங்காத‌தால் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளவர் நரேஷ் மீனா. அதன்பின்னர், காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், டியோலி உனியரா தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, சம்ரவாடா கிராமத்தில் பணியில் இருந்த அமித் சௌத்ரி என்ற அதிகாரியை, சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா சரமாரியாக அறைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வேட்பாளர் வெளியேற்றப்பட்டார். அவரை கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்ரவாடா கிராமத்தில் சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனாவும் அவரது ஆதரவாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டபோது, திடீரென வன்முறை வெடித்தது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட நரேஷ் மீனாவை போலீசார் கைது செய்ய முயன்றதால், போலீசாரையும் தாக்கி விரட்டியடித்தனர். இதில் பல போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறையில் பல்வேறு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆளும்கட்சிக்கு ஆதராக போலீசார் செயல்பட்டதால் வன்முறை வெடித்த‌தாக நரேஷ் மீனா தரப்பினர் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்