மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாஷ் ஷிண்டேவின் உடைமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். பால்காரிக் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற போது, போலீசார் ஹெலிபேட் மைதானத்திற்கு வந்த ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டரையும் அதிலிருந்து அவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். பாராமதி பகுதியில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற ஹெலிகாப்டரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.