"எச்சரிக்கை.. உயிருக்கு உலை" - "வவ்வால்களில் கொடிய நிபா வைரஸ்" - உச்சகட்ட அலர்ட்

Update: 2023-10-26 14:56 GMT

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் வவ்வால்களில் நிபா வைரஸ் இருப்பதை ஐசிஎம்ஆர் உறுதி செய்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

vovt

பத்தேரி மற்றும் மானந்தவாடி பகுதிகளில் வௌவால்களில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சுகாதார ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நோயின் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், பறவைகள் கடித்த பழங்கள் மற்றும் பிற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கோழிக்கோட்டில் பிடிபட்ட 12 வவ்வால்களில் நிபா வைரஸ் ஆன்டிபாடி கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அங்கு, நிபாவால் ஒருவர் இறந்திருப்பதாகவும் கூறினார். அறிகுறியுள்ள நோயாளிகளை கவனிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வவ்வால்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்