டிஜிட்டல் பூட்டால் மூச்சு திணறி 3 உயிர்கள் பலி - தீபாவளியன்று துயர சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டின் டிஜிட்டல் பூட்டின் ரகசிய குறியீட்டை பதற்றத்தில் மறந்ததால் உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர், அவரது மனைவி, பணிப்பெண் ஆகிய மூவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
கஃதேவ் பகுதியில் உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சஞ்சய் ஷியாம் தசானி தன் மனைவி கனிகா தசானி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்...
இவர்கள் வீட்டில் சப்பி செளஹான் என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார்...
பாண்டு நகரில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி பங்களா அமைந்துள்ள நிலையில்
தீபாவளி அன்று இரவில் இவர்கள் வீட்டில் பூஜை மற்றும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது...
அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது...
அதிகாலை 3 மணிக்கு பூஜை அறையில் இருந்த விளக்கு, மரத்தால் செய்யப்பட்ட சாமி சிலையின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது.
இதில் ஆட்டோமெட்டிக் கதவு பொருத்தப்பட்டுள்ள படுக்கை அறைக்குள் அத்தம்பதியும் பணிப்பெண்ணும் சிக்கிக் கொண்டனர்.
பதற்றத்தில் இருந்ததால் சஞ்சய்க்கு டிஜிட்டல் பூட்டின் ரகசிய குறியீடு எண் மறந்து விட்டது...
மாற்றி மாற்றி எண்களை அழுத்தியதால் மூடிய அறை கதவை அவர்களால் திறக்க முடியவில்லை.
இந்நிலையில் தீ மற்றும் புகை காரணமாக மூச்சுத்திணறி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகன் தீபாவளி கொண்டாட்டத்திற்காக வெளியில் சென்றிருந்ததால் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.