தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். காற்று மாசானது குழந்தைகளின் எதிர்காலத்தை திருடி முதியவர்களை மூச்சுத் திணற செய்யும் பொது சுகாதார நெருக்கடி என்று குறிப்பிட்ட அவர், எண்ணற்ற உயிர்களை பாழாக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பேரழிவு என்று தெரிவித்துள்ளார். சுற்றுலா வீழ்ச்சியடைந்து, நமது உலகளாவிய நற்பெயர் சிதைந்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காற்று மாசை சுத்தம் செய்ய தீர்க்கமான நடவடிக்கைகள், தேசிய அளவிலான கூட்டு நடவடிக்கைகள் தேவையே தவிர அரசியல் பலி போடும் விளையாட்டுக்கள் அல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், இந்த நெருக்கடி குறித்து எம்பிக்கள் நினைவு கூறுவார்கள் என்றும், இதை முடிவுக்கு கொண்டு வர ஒன்று கூடி விவாதிப்பது நமது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.