உத்தரப்பிரதேச மாநிலம் காஷிப்பூரில், தாறுமாறாக ஓடி பொதுமக்கள் மீது கார் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கார் ஓட்டுநரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...