உத்தரபிரதேசம் புலந்த்ஷாஹரில், கலப்பட பால் விற்று வந்த கும்பலை உணவு பாதுகாப்பு துறையினர் பிடித்துள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட புரோட்டின் மாவு மற்றும் குளுக்கோஸ் கலந்து இந்த பால் தயாரிக்கப்பட்டதாக, பால் மாதிரிகளை
பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குர்கான் ஆகிய நகரங்களுக்கு இந்த கலப்பட பால் விநியோகிக்கப்பட்டது. கலப்பட பாலை கண்டுபிடித்த அதிகாரிகள், ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட பாலை கீழே கொட்டி அழிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.