அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் நகரில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மீது கடந்த மார்ச் 26ஆம் தேதி கப்பல் ஒன்று மோதியதால், பாலம் முழுவதும் தரைமட்டமானது. பாலத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், கப்பலின் முன்பகுதியில் விழுந்த பாலத்தின் பகுதிகள் அகற்றப்படாமல் இருந்தன. அவற்றை அகற்றாததால், கப்பலை அப்புறப்படுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, கப்பலுக்கு சேதம் ஏற்படாமல், பாலத்தின் உடைந்த பாகத்தை அகற்ற, அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர்கள் உதவியுடன் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டது. இரும்பு பாலத்தில் எங்கெங்கு வெடி பொருட்கள் வைத்து பாதுகாப்பாக தகர்க்க வேண்டும்? என்பதை ராணுவம் கிராபிக்ஸ் காட்சியாக வெளியிட்டுள்ளது.