திருப்பதியில் பிரமாண்டமாக நடந்த சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி... புனித நீராடிய பக்தர்கள்

Update: 2024-10-12 08:31 GMT

திருப்பதியில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு நாளான இன்று கோவில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம், கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி பூதேவி சமயமாக மலையப்பசாமி ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக வராகசாமி கோவில் முகமண்டபத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்திற்குள் கொண்டு சென்று மூன்று முறை தண்ணீரில் மூழ்க செய்து தீர்த்தவாரி நடத்தினர்.

அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். மாலை நடைபெறும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்