வாகனத்தில் பணம் வைப்பவர்கள் உஷார்..! கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2023-07-30 03:39 GMT

கர்நாடகாவில் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனெக்கல் பகுதியில் வசித்து வருபவர் அஸ்வின் ரெட்டி. இவர் தனது காரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, இவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்